கிளிநொச்சி கனகாம்பிகைகுளத்தில் விபத்து : மாணவர்கள் உட்பட ஐவர் படுகாயம்

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில், மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து, இன்று மாலை விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மாணவர்கள் ஐவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாந்தபுரம் பகுதியில் இருந்து கனகாம்பிகை குளத்துக்கு மாணவர்களை ஏற்றி வந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

படுகாயங்களுக்குள்ளான மாணவர்கள் இருவர், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like