அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்சன் ஆகியோர் சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டு 5ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்று மெற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று கந்தசுவாமி ஆலய முன்றலில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினால் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கான நீதி, இராணுவ முகாம்களை அகற்றுதல், காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

You might also like