100ஆவது நாளை எட்டியுள்ள இரணைதீவு மக்களின் போராட்டம்

கிளிநொச்சி – இரணைதீவு மக்கள் பூர்வீக இடத்தில் தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 100ஆவது நாளை எட்டியுள்ளது.

இதனை முன்னிட்டு இரணைமாதா நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இதுவரை காலமும் கடற்கரையில் இடம்பெற்று வந்த போராட்டம் மழை காலம் ஆரம்பமாகவுள்ளதால் தேவாலயத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்து இன்று நூறாவது நாள். இந்த நூறு நாட்களுக்குள் பல அரசியல்வாதிகள் இங்கு வந்து சென்றுள்ளனர். எனினும் அவர்கள் வந்தபோது வழங்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

இது வரையில் வந்தவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் குறைகூறி விட்டும், பொய்யான வாக்குறுதிகளை வழங்கி விட்டுமே சென்றதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

You might also like