கிளிநொச்சி மாவட்டத்தில் 12, 200 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் தேவை

நிலவும் வரட்சி காலநிலை காரணமாக 12, 200 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய தேவையுள்ளதாக, பிரதேச  அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று  இடம்பெற்றது.

இதன்போது, “நாட்டில் தற்போது நிலவும் வரட்சி காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலகங்களின் கீழ் உள்ள 58 கிராமசேவையாளர் பிரிவுகளில், 12,200 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய தேவையுள்ளது.

நாளொன்றுக்கு, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகங்களின் கீழ் 60,355 லீற்றர் குடிநீரும், பூநகரி பிரதேச செயலகங்களின் கீழ்  247,820 லீற்றர் குடிநீரும், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலகங்களின் கீழ் 273,323 லீற்றர் குடிநீரும் விநியோகிக்க வேண்டிய தேவையுள்ளது.

எனினும், இதற்கான வசதிகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன” என ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like