வவுனியா மாவட்ட மட்ட முதியோர் தின சமுர்த்தி பயனாளிகளுக்கான பொதுஅறிவு போட்டிகள்

சமூக சேவைகள் அமைச்சு தேசிய முதியோர் செயலகம் மாகாண சமூக சேவைகள் திணைக்களம் என்பன இணைந்து வவுனியா மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து பிரதேச செயலக மட்ட பாடசாலை மாணவரிடையே பொது அறிவு வினாடி வினாப்போட்டியை வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தினர் .

மாவட்ட சமுர்த்தி அவிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் திருமதி எஸ்.பத்மரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செட்டிகுள பிரதேச செயலக பாவற்குளம் கனேஸ்வரா வித்தியாலய மாணவிகளும் , வவுனியா வடக்கு பிரதேச செயலக நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளும் , வவுனியா நகர பிரதேசம் சார்பில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயம், சிசிரிஎம்எஸ் பாடசாலை, வவுனியா மதீனா வித்தியாலயம் , சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மாணவர்களும் பங்கு கொண்டனர் .

இறுதிப்போட்டியில் வவுனியா நகர பிரதேச செயலக அணியுடன் செட்டிகுள பிரதேச செயலக அணி சிறப்பாக போட்யிட்டத்தில் செட்டிகுளபிரதேச செயலக அணி 35 மேலதிக புள்ளிகளால் வெற்றி பெற்றது.

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளே இதில் பங்குபற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள கணக்காளர் திரு எஸ் .பால்ராஜ் விசேட விருந்தினராக இதில் கலந்து கொண்டார் . மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் வினாடிவினா நிகழ்வை சிறப்பாக நடத்திவைத்தார் . மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி தனுசியா பாலேந்திரன் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டார் .

நிகழ்வில் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு இ.நித்தியானந்தன் மாவட்ட செயலக சமூகசேவை உத்தியோகத்தர் திரு கே.இராஜசேகர் திருமதி சந்திரிக்கா ரட்னாயக்கா ஆகியோர் நடுவர்களாக கடமையாற்றினர் . இவர்களுடன் சமுர்த்தி திணைக்கள முகாமையாளர்களான திரு வில்வராஜா, திரு இராஜசேகர் ,திரு சுசீந்திரராஜா , திருமதி சந்திரகுமார் , திரு சிவகுமார் ,திரு நிரஞ்சிதகுமார், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு அமல்ராஜ் திரு யூடிக்குமரன் செல்வி தேவநந்தினி திரு விமலகாந் பாடசாலை அதிபர் சிசில் ராஜகுமார ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் .

You might also like