யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் சர்வதேச ஆய்வு மாநாடு – 2017

வவுனியா வளாகத்தில் பேண்தகு அபிவிருத்திக்கான பெறுமதி உருவாக்கம் எனும் தொனிப் பொருளில் வவுனியா வளாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச ஆய்வு மாநாடானது புதன்கிழமை நாளை 09.08 காலை 9 மணியளவில் வியாபாரக்கற்கை நெறிகள் பீடம், பம்பைமடுவில் ஆரம்பமாகவுள்ளதாக இன்று மதியம் வவுனியா வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வவுனியா வளாக முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்மாநாட்டில் சிறப்புரையாற்றுவதற்கு பாகிஸ்தானிலிருந்து மின்பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஹமாட் ஓமர், மற்றும் இந்தியாவிலிருந்து முகாமைத்துவர் பேராசிரியர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் பேண்தகு அபிவிருத்திக்கான பெறுமதி உருவாக்கம் தொடர்பாக ஜம்பது ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் இம்மாநாட்டில்  வாசிக்கப்படவுள்ளதாகவும் இக்கட்டுரைகளானது இலங்கையில் பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்தவதற்கு உறுதுணையாக அமையுமெனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ் சர்வதேச ஆய்வு மாநாடு கலாநிதி க. கோப்பெருந்தேவியின் ஏற்பாட்டில் இடம்பெறுவதுடன் வவுனியா வாளாக முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.

You might also like