வெளிநாடொன்றில் ஆபத்தான நிலையில் இலங்கை பெண்! அவசர உதவி கோரும் பணியகம்

வெளிநாடொன்றின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடொன்றின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் இலங்கை பெண் தொடர்பிலேயே அவசரமாக தகவல் தேவைப்படுவதாக பணியகம் தெரிவித்துள்ளது.

பஹ்ரைன் சல்மானியா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பெண், அந்த நாட்டு இலங்கை தூதரக அலுவலகத்தின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

பஹ்ரைன் நாட்டு பொலிஸாரினால் சல்மானியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த பெண் நினைவற்ற நிலையில் உள்ளதால் அவர் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டுள்ளது.

கனேமுல்ல பகுதியை சேர்ந்த இனோக்கா தமயந்தி என்ற பெண்ணே இவ்வாறான நெருக்கடி நிலையில் உள்ளார்.

அவரிடம் விமான கடவுச்சீட்டு அல்லது அடையாளத்தை உறுதி செய்ய கூடிய வகையில் எந்த ஒரு ஆவணமும் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.

அவருக்கு இலங்கையில் வசித்தமை தொடர்பில் உரிய நினைவில்லை என தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் தொடர்பில் தகவல் தேடி பார்ப்பதற்கு அவசியம் என்பதனால் பொது மக்களின் உதவி நாடப்பட்டுள்ளது.

விசேடமாக அவர் தொடர்பில் தகவல் அறிந்தால் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 011 2 864 100 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

You might also like