தமிழரசுக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்கள் இன்று சம்பந்தனுடன் முக்கிய சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவரான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இலங்கை தமிழரசு கட்சியின் வட மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது வட மாகாணசபை நிலைவரம் குறித்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தமிழரசு கட்சி வட மாகாண சபையில் அடுத்ததாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அறியமுடிகின்றது.

You might also like