கன்றை தொட்ட நபரை கடுமையாகத் தாக்கிக் கொன்ற பசு

மொனராகல பொதுவில பிரதேசத்தில் தனது கன்றை தொட்ட நபர் ஒருவரை தாய்ப் பசு கடுமையாகத் தாக்கி கொன்றுள்ளது.

புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த கன்றை நபர் ஒருவர் தொட்ட போது அருகாமையில் இருந்த தாய்ப் பசு ஆத்திரம் காரணமாக, குறித்த நபரை கடுமையாகத் தாக்கியுள்ளது.

தாக்குதலினால் காயமடைந்த நபர் பானம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

78 வயதான கலப்பத்திகே பிரமேதாச என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாத்தறை கொட்டேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், விவசாய நடவடிக்கைகளுக்காக பானம பிரதேசத்திற்கு சென்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கன்றை தொட்ட போது தாய்ப்பசு குறித்த நபரின் தலையில் வயிற்றில் மற்றும் கால்களில் கடுமையாக தாக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பானம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like