இலங்கையில் பத்து பேரில் ஒருவர் ஏதேனும் வழக்கு ஒன்றில் தொடர்புபட்டுள்ளார்?

இலங்கையில் பத்து பேரில் ஒருவர் ஏதேனும் வழக்கு ஒன்றில் தொடர்புபட்டுள்ளதாக பெலியத்த துணை பிரதேச செயலாளர் ஜே.ஜீ.ருவன் பத்திரண தெரிவித்துள்ளார்.

பெலியத்த பிரதேச செயலகத்தில் இணக்க சபை உறுப்பினர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இணக்க சபைக்காக நியமிக்கப்படுவோருக்கு போதியளவு தெளிவு இருக்க வேண்டும்.

கடந்த பத்து மாதங்களில் நாட்டின் நீதிமன்றங்களில் எட்டு லட்சம் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பத்து பேரில் ஒருவர் ஏதேனும் ஓர் வழக்குடன் தொடர்புபட்டிருக்கின்றார்.

இணக்க சபைகளின் மூலம் வழக்கு விசாரணைகளின் சுமை குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like