வவுனியாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் 40வருட அரசியல் பிரவேசம் விஷேட வழிபாடு

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேசுவரி ஆலயத்தில் இன்று மதியம் இலங்கை பிரதமரின் அரசியல் பிரவேசத்திற்கு 40வருடத்தினை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த. திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா. உதயராசா, பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்  வீ.பிரதீபன், அகிலாண்டேசுவரி ஆலயத்தின் செயலாளர் ஆறுமுகம் நவரட்ணராஜா, கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஜக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் சிவலிங்கம், கருணதாசா என பலரும் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடகளை மேற்கொண்டனர்.

 

You might also like