49 வயது பெண்ணுக்கு 31 வயது இளைஞன் மீது ஏற்பட்ட காதல்! நடந்த விபரீதம் என்ன?

49 வயதான பெண் ஒருவருக்கும், 31 வயதான ஆண் ஒருவருக்கும் பஸ்ஸில் ஏற்பட்ட காதல் விபரீதமாக முடிந்துள்ளது.

வரகாபொல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளம் தோற்றமுடைய 49 வயதான பெண் ஒருவர், 31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார்.

கொழும்பு தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி வரும் பெண், அனுராதபுரத்தில் அமைந்துள்ள தமது வீட்டுக்கு செல்வதற்காக பஸ்ஸில் ஏறியுள்ளார்.

அருகாமையில் அமர்ந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

தாம் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிறுவனமொன்றில் கடமையாற்றி வருவதாக குறித்த நபர் தம்மை அடையாளப்படுத்தியுள்ளார்.

ஒன்றரை லட்சம் ரூபா சம்பளம் பெற்றுக்கொள்ளக்கூடிய வெளிநாட்டு தொழில் வாய்ப்பு வழங்க முடியும் என அவர் பெண்ணிடம் கூறியுள்ளார்.

இருவரும் தொலைபேசி இலக்கங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஒன்று பற்றி பேசுவதற்காக வரகாபொலவிற்கு வருமாறு குறித்த நபர் பெண்ணை அழைத்துள்ளார்.

இருவரும் நகரத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்று தங்கியுள்ளனர். பெண் குளியலறைக்கு சென்று திரும்பிய போது வங்கிக்கு அவசரமாக செல்ல வேண்டுமெனக் கூறி குறித்த நபர் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் நபரை காணாத காரணத்தினால், தனது பையை சோதனையிட்ட பெண் அதில் இருந்த 51000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை காணவில்லை என்பதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் கையில் இருந்த மோதிரத்தை கழற்றி ஹோட்டல் கட்டணத்திற்காக கொடுத்துவிட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் 49 வயதான பெண் வேறொரு தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி, இன்னொரு பெண் போன்று அவருடன் உரையாடியுள்ளார்.

இதனூடாக குறித்த நபருடன் நட்பை ஏற்படுத்தி, பொல்கஹாவெல நகரிற்கு குறித்த நபரை அழைப்பித்து பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளார்.

You might also like