முறிகண்டி சிறுவர் கழகத்திற்கான ஒலியமைப்பு வசதிகள் வழங்கி வைப்பு

முறிகண்டி தென்னிந்திய திருச்சபை புனித பவுல் சிறுவர் கழகத்தின் செயற்பாட்டிற்கான ஒலியமைப்பு வசதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசனின் மாகாண சபை நிதியிலிருந்து குறித்த ஒலியமைப்பு வசதிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த சிறுவர் கழகத்தினால் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த ஒலியமைப்பு பொருட்கள் கிடைத்துள்ளமையால் மேலும் பல நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என சிறுவர் கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த ஒலியமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்த மாகாண சபை உறுப்பினருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

You might also like