ஹரிஷ்ணவிக்கு வயது 15 வழக்கு விசாரணையின் முன்னேற்றம் இல்லை : தயார் கவலை

வவுனியாவில் கடந்த 2016.02.16அன்று வவுனியா விபுலானந்தாக்கல்லூரி மாணவியான கெங்காதரன் கரிஸ்ணவி உக்கிளாங்கும் பகுதியில் தனது வீட்டில் வைத்து பாலியல் வண்புனர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது படுகொலை இடம்பெற்று ஒருவருடத்திற்கு மேலாகியும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதே தவிர எவ்வித முன்னேற்றமும் எற்படவில்லை சந்தேகத்தில் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு தற்போது மேல் நீதிமன்ற பிணையுடன் வெளியே வந்துள்ளார்.
எனது மகளை பாலியல் வண்புனர்விற்குட்படுத்தியவருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். எனது மகளின் மரணத்திற்கு நீதி வழங்கவேண்டும். 13வயதில் எனது மகளின் வாழ்வினை சிதைத்து சின்னாபின்னமாக்கிய கயவனை கைது செய்து தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். எனது மகளின் ஆசைகள் நிறைவேற்றப்படவில்லை. நினைத்துப்பார்க்க முடியாத துன்பத்தை அவள் எமக்குத் தந்துவிட்டுச் சென்றுள்ளார். எனவே எனது மகளின் வழக்கு விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கரிஸ்ணவியின் தயார் தெரிவித்துள்ளார்.
28ஆம் திகதி வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளது
You might also like