கிளிநொச்சியில் நீண்ட வறட்சிக்குப் பின்னர் மழைவீழ்ச்சி

கிளிநொச்சியில் நீண்ட வறட்சிக்குப் பின்னர் இன்று பதிவாகியுள்ள மழையால், கிளிநொச்சிக்குளம் மற்றும் இரணைமடு குளத்தின் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதாக நீர்ப்பாசன பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவிய கடுமையான வறட்சி காரணமாக சிறுபோகச் செய்கை ஆபத்தான ஓர் கட்டத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் கிளிநொச்சியில் ஓரளவு மழை பதிவாகியுள்ளது.

இதனால் கிளிநொச்சி குளத்தினுடைய நீர் மட்டமும் இரணைமடு குளத்தினுடைய நீர் மட்டமும் சற்று உயர்வடைந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவிக்கையில்,

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் நாற்பது மில்லி மீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் இரணைமடு குளத்தினுடைய நீர் மட்டம் 6 அங்குலம் வரையும் உயர்வடைந்திருக்கின்றது.

அத்துடன் இரணைமடு குளத்தின் நீரைச் சேமித்து சிறுபோக செய்கைக்கு நீரை விநியோகிக்கின்ற கிளிநொச்சி குளத்தின் நீர்மட்டம் 7 அடியாக உயர்வடைந்துள்ளது.

இதனால் இந்த வறட்சியில் எதிர்கொண்ட சவாலை முழுமையாகச் சமாளிக்க முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[quote][/quote]

 

You might also like