மடு தேவாலயப் பகுதியில், மின்னல் தாக்கியதில், இளம் தாய் மரணம்..!

மன்னார் மாவட்டம், மடு தேவாலயப் பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இளம் தாயின் சடலம் மன்னார் பொதுவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொது வைத்தியசாலையின் தகவல் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான ‘திலினி மதுசன்’ (வயது-25) என தெரிய வந்துள்ளது.

மன்னார் மாவட்டம் மடுத்திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம் பெறவுள்ள நிலையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மடுத் திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையிலே மடுத் திருத்தலப் பகுதியில் இன்று புதன்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாயாரான ‘திலினி மதுசன்’ (வயது-25) என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

மேலதிக விசாரணைகனை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like