சுமந்திரனை கொலை செய்ய சதி முயற்சி! சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர்கள் ஐந்து பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் ஐவரையும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை, சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like