கரைச்சிப் பிரதேசத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களினதும் மாற்றுத்திறனாளிகளினதும் புள்ளிவிபரம் வெளியீடு

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்தில் 3181 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் 1528 மாற்றுத்திறனாளிகளும் வாழ்ந்து வருவதாக பிரதேச செயலகத்தினால் வெயியிடப்பட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகூடிய சனத்தொகையைக் கொண்ட கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள 42 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 41 ஆயிரத்து 254 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.

இந்நிலையில், பிரதேச செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையின் படி,

3181 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் 1528 மாற்றுத்திறனாளிகளும் வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

30 வயதிற்கும் குறைவான 212 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும், 40 வயதிற்கு உட்பட்ட 484 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும், 50 வயதிற்குட்பட்ட 567 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் வாழ்ந்து வருவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 60 வயதிற்குட்பட்ட 744 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும், 60 வயதிற்கு மேற்பட்ட 1174 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுமாக 3181 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இருப்பதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டு கைகளையும் இழந்த 09 பேரும், இரண்டு கால்களை இழந்த 21 பேரும், இரு கண் பார்வைகளை இழந்த 22 பேரும், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 120 பேரும் உள்ளடங்கலாக சுமார் 1528 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக குறித்த புள்ளிவிபர அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like