நெல் வயல்களை பாதுகாக்க போராடும் கிளிநொச்சி விவசாயிகள்

நெல் வயல்களை நம்பி வயல் விதைப்பில் ஈடுப்பட்டவர்களின் வயல்கள் அழிந்து விடும் நிலையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி காரணமாக குளத்திலும் நீர் முற்று முழுதாக திறந்துவிடப்பட்டுள்ளமையால் இரணைமடுவிலிருந்தும் வயல்களுக்கு நீர் வழங்க முடியாத நிலை காணப்படுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

இதுவே பெரும் நெருக்கடிக்கு காரணமாக அமைந்துள்ளதுடன் இதனால் ஏனைய சிறு குளங்களிலிருந்து நீர் பெறப்பட்டு பல்வேறு மாற்றுவழிகளில்

இரணைமடு குளத்தின் கீழான வயல்களுக்கு நீர் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கிளிநொச்சியில் எஞ்சிய தங்களுடைய வயல்களை பாதுகாத்துக் கொள்ள விவசாயிகள் என்னென்ன வழிகளில் நீரைப் பெற்று பயிர்களை பாதுகாத்துக்கொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக வயல் நிலங்களில் குழாய் கிணறுகள் அமைத்தல், கிணறுகளில் இருந்து நீா்பம்பி மூலம் நீர் இறைத்தல், போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும், இரணைமடுவுக்கு கீழ் காணப்படுகின்ற மருதநகர் வயல்களுக்கு கனகாம்பிகை குளத்திலிருந்து நூற்றுக்கணக்கான குழாய்கள் மூலம் வான்பாயும் வழி ஊடாக நீர் பெறப்பட்டு கிளிநொச்சிகுளத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து மருதநகர் வயல்களுக்கு வழங்கும் மற்றொரு நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

You might also like