வவுனியா ஏ9 வீதியில் பாரவூர்தி தடம்புரண்டு விபத்து

அம்பாறையிலிருந்து, கிளிநொச்சி நோக்கி செங்கற்களை ஏற்றிச் சென்ற ஹன்ரர் ரக பாரவூர்தியொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று அதிகாலை வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரவூர்தி வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது அதன் வில்லுத்தகடு உடைந்தமையாலேயே, விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், வாகன சாரதி மற்றும் பாரவூர்தியில் பயணித்த உதவியாளருக்கு எந்தவித காயமும் இன்றி தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளனர்.

இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like