வித்யா படுகொலை: விஜயகலாவிடம் குற்றப் புலனாய்பு பிரிவினர் நீண்ட நேரம் வாக்குமூலம் பதிவு

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

வித்யா படுகொலை வழங்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பித்துச் செல்வதற்கு உதவியளித்ததாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவல்துறை நீதவான் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

You might also like