மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க அமைச்சரவை பத்திரம்

ஹம்பாந்தோட்டையின் துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ள நிலையில் மத்தள விமான நிலையத்தை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான கோரிக்கை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

சீனாவின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய ஏற்கனவே இந்திய நிறுவனம் விலைக்கோரலை சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like