வட மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் அடைமழை!

நாட்டின் பல பகுதிகளின் இன்று மாலை அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்றைய தினம் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளின் வானம் மேக கூட்டத்தினால் நிறைந்து காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, காலி, கேகாலை, மாத்தறை, பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியாக மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் மழை பெய்யும் பிரதேசங்களிலும் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பிரதேசங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் மழை பெய்யும் தன்மை காணப்படுகின்றது.

ஏனைய கடல் பிரதேசங்களில் இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடியு மழை பெய்ய கூடும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like