வவுனியாவிலிருந்து நல்லைக்கந்தனுக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை 

வவுனியாவிலிருந்து இவ்வருடம் 7ஆவது தடவையாக நல்லைக்கந்தன் திருத்தலத்திற்கான வேல் தாங்கிய நடை பாத யாத்திரை எதிர்வரும் திங்கட்கிழமை 14.08.2017 காலை 8.00 மணியளவில் வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரக்காளி அம்பாள் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனுடைய தேர்த்திருவிழா 20ஆம் திகதி நடைபெறவுள்ளதையிட்டு வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து வேல் தாங்கிய நடை பாத யாத்திரை 14ஆம் திகதி காலை ஆரம்பமாகி 20ஆம் திகதி நல்லூர் கந்தன் ஆலயத்தினை அடையவுள்ளது.

பிரதான ஏ9 வீதிவழியாக செல்லும் வீதியிலுள்ள இந்து ஆலயங்களில் தரித்து நின்று அங்கு இடம்பெறும் பூஜை வழிபாடுகளிலும் கலந்து 6 நாட்கள் தொடர்ந்து பாதை யாத்திரையாக சென்றுகொண்டு 114 ஆவது ஆலயமாக நல்லலூர் கந்தன் ஆலயத்தினை 20ஆம் திகதி அடையவுள்ளது.

இதில் கலந்து கொள்ளவுள்ள பக்தர்கள் 13ஆம் திகதி வவுனியா வேப்பங்குளம் ஆலயத்திற்கு வந்து குறித்த பாதை யாத்திரையில் பங்கு கொள்வதுடன் வேல் தாங்கிய நடை பாத யாத்திரை அடியார்களுக்கு பிரதான ஏ9 வீதியிலிருக்கும் சகல இந்து அறங்காவலர்சபையினரையும் ஆலய குருமார்கள், ஆகியோர் வேல் தாங்கிய நடை பாதை யாத்திரை அடியார்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய நிர்வாகி அறச்செல்வி கு. ஜெயராணி தெரிவித்தார்.

You might also like