செஞ்சோலை சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்களை சந்தித்தார் முதலமைச்சர்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், செஞ்சோலை சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்களை சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டுள்ளார்.

வடமாகாண சபையின் 101ஆம் அமர்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமர்வுகளை பார்வையிடுவதற்கு செஞ்சோலை சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்கள் வருகைத்தந்துள்ளனர்.

இதன்போது தமக்கான கற்றல் உபகரணங்களை தருமாறும் பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும், வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாணசபை உறுப்பினர்களான ஜீ்.ரி.லிங்கநாதன், பொ.ஐங்கரநேசன், து.ரவிகரன் உள்ளிட்டோரையும் சிறுவர்கள் சந்தித்தனர்.

You might also like