உலக செஞ்சிலுவை சங்கப்பிரதிநிதிகள் கிளிநொச்சி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு

உலக செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான வடக்கு இணைப்பாளர் உள்ளிட்ட சர்வதேச பிரதிநிதிகள் அண்மையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி கிளைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது கிளிநொச்சி கிளையினூடாக மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில், இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி கிளையின் தலைவர் வேழமாலிகிதனுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, எதிர்காலத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளனர்.

குறித்த சந்திப்பில் கிளிநொச்சி இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் வேழமாலிகிதன் மற்றும் செயலாளர் சேதுபதி, கிளையின் நிறைவேற்று அலுவலர் கலந்து கொண்டு விளக்கமளித்திருந்தனர்.

You might also like