ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கூரிய ஆயுதம் ஒன்றினால் தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக இரண்டாவது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

லசந்த விக்ரமதுங்க சடலம் தொடர்பில் நடத்தப்பட்ட இரண்டாவது பிரேதப் பரிசோதனை அறிக்கையை அடிப்படையாக கொண்டு கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பு நகருக்கு அருகில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

அத்திட்டிய பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் நடந்தது. லசந்த சுட்டுக்கொல்லப்பட்டதாகவே அப்போது செய்திகள் வெளியாகியதுடன், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அப்படியே தெரிவிக்கப்பட்டிருந்தது.

You might also like