சற்று முன் வவுனியா குருமன்காட்டில் மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் காயம்

வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று (10.08.2017) இரவு 8.50மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குருமன்காட்டு சந்தியிலிருந்து மன்னார் வீதியியுடாக பயணித்த துவிச்சக்கரவண்டியின் மீது அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் துவிச்சக்கரவண்டியில் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியினை செலுத்தி சென்ற நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை பக்கச்சார்பாக முன்னேடுத்துள்ளதாகவும் காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்காது அவரது வீட்டிற்கு அழைத்து சென்று சேர்த்துள்ளனர். அதன் பின்னர் குறித்த நபரின் மகனே அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

You might also like