கிளிநொச்சியில் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஒருவருக்கு தண்டப்பணம்

கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஒருவருக்கு 1500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், பூநகரிப் பகுதியில் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திச்சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like