கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த நபருக்கு தண்டப்பணம் விதிப்பு

கிளிநொச்சி பகுதியில் 13 கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நபருக்கு 5000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

13 கிராம் கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவே இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like