கிளிநொச்சியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like