கொழும்பில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இளம் பெண் கைது!

கொழும்பில் கொள்ளையில் ஈடுபடும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல வீடுகளுக்கு பணிப்பெண்ணாக சென்று அங்கு கொள்ளையடிக்கும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவையில் அமைந்துள்ள வீடொன்றில் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்த நிலையில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகை காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான குறித்த பெண் 32 வயதுடைய இராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

You might also like