வவுனியாவில் சுகாதார தொண்டர்களின் போராட்டம் 100வது நாள் நிறைவு : உணவு தவிர்ப்பு போராட்டம்

வவுனியாவில் கடந்த 04.05.2017ம் திகதி வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த சுகாதார தொண்டர்களின் போராட்டம் இன்றுடன் (11.08.2017) நூறாவது நாள் அதனையோட்டி அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் ஏ9 வீதியுடாக வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததுடன் சுகாதாரத் தொண்டர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பான கோரிக்கை மகஜரினை  ( வவுனியா மாவட்ட செயலாளரின் மகஜரை ) பிரதம கணக்காளர் அ.பாலகுமார் பெற்றுக்கொண்டார்.

அங்கிருந்து ஆரம்பித்த சுகாதார தொண்டர்களின் போராட்டம் மன்னார் வீதியுடாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையை சென்றடைந்து பணிப்பாளரின் மகஜரை பிரதிப்பணிப்பாளர் மகேந்திரன் பெற்றுக்கொண்டார்.

 அதன் பின்னர் அங்கிருந்து போராட்ட இடத்திற்கு சென்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

போராட்ட இடத்தில் கறுப்புக்கொடியினை கட்டி இன்று தூக்க தினமாக அனுஸ்டித்து வருகின்றனர்.

வவுனியாவில் 101 சுகாதார தொண்டர்கள் நிரந்தர நியமனமற்று இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like