பளையில் குடும்பப் பிரச்சினை வாள்வெட்டில் முடிந்தது: 4 பேர் படுகாயம்

பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்கத்தார் வயல் பகுதியில் குடும்ப பிரச்சினையால் இரண்டு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் அது வாள் வெட்டில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மூவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி A.S.W. றஞ்சண பண்பார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சங்கத்தார் வயல் பகுதியில் உள்ள இரு குடும்பங்களுக்கிடையில் குடும்ப பிணக்கு காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் இந்த வாள்வெட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like