கிளிநொச்சியில் போதையில் வாகனம் செலுத்திய சாரதி – தடையுடன் தண்டப்பணம் விதித்த நீதிமன்றம்

கிளிநொச்சி – நாச்சிக்குடா பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதியொருவருக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் 10,500 ரூபா தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த சாரதியை நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இருவார காலத்திற்கு சாரதியனுமதிப் பத்திரமும் தடை செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – நாச்சிக்குடா பகுதியில் வரிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய சாரதியொருவருக்கு எதிராகவே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like