வவுனியாவில் பொலிசார் முன்னிலையில் பொலிசாரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

வவுனியாவில் இன்று (11.08.2017) பிற்பகல் 3.00மணியளவில் குருமன்காட்டு சந்தியில் நிறுத்தி வைத்த பொலிசாரின் மோட்டார் சைக்கிலை இனந்தெரியாத நபர்  திருடி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் மோட்டார் சைக்கிலை வர்த்தக நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிலை நிறுத்தி விட்டு வர்த்தக நிலையத்திற்கு சென்று மீண்டும் திரும்பிய சமயத்தில் மோட்டார் சைக்கில் களவாடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாக போக்குவரத்து பொலிஸார் கடமையில் இருந்த போழுதும் இவ்வாறு மோட்டார் சைக்கில் களவாடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இச் சம்பவம் தொடர்பில் வர்த்தக நிலையத்திற்கு அருகேயிருந்த நபரிடம் விசாரித்த சமயத்தில் மோட்டார் சைக்கிலை திருடிச் சென்ற நபர் தலைக்கவசம் அணியாது சென்றதாகவும் இவ்விடயம் தொடர்பில் அருகே கடமையிலிருந்து போக்குவரத்து பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

You might also like