இலங்கையின் முதலாவது தமிழ் பெண் விமானி நாடாளுமன்றுக்கு திடீர் விஜயம்

இலங்கையின் முதல் தமிழ் பெண் விமானி இன்று திடீர் விஜயமாக நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியது.

இதன்போது இலங்கையின் முதல் தமிழ் பெண் விமானியான அர்ச்சனா செல்லத்துரை நாடாளுமன்றத்திற்கு சென்று சபை நடவடிக்கைகளை பார்வையிட்டுள்ளார்.

மேலும், இலங்கையின் முதல் தமிழ் பெண் விமானியான அர்ச்சனா செல்லத்துரை யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவர்.

தற்போது டென்மார்க்கில் வசித்து வரும் அர்ச்சனா இலங்கையின் முதல் தமிழ் பெண் விமானி என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like