தேசிய மட்ட தெரிவு அணிக்கு நங்கூரம் விளையாட்டுக் கழகம் வர்ண சீருடை அன்பளிப்பு

புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தினால், வவுனியா தரணிக்குளம் தரணதீபம் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்ட அணி தற்போது நடைபெறும் DSI தேசிய மட்ட போட்டிக்காக மாவட்ட மட்ட போட்டியில் வெற்றியீட்டி தெரிவு செய்யப்பட்டுள்ளது. அவ் அணிக்கான வர்ண சீருடையை வடிவமைத்து வழங்கியுள்ளார்கள்.

சீருடை அறிமுக விழா பாடசாலை மைதானத்தில் 10.08.2017 அன்று மாலை 04.00 மணிக்கு கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமான திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

சிறப்பு அதிதிகளாக வவுனியா பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் திரு விந்துஜன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு சு.காண்டீபன், புளொட் இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர் திரு வ.பிரதீபன், நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் அமைப்பாளர் திரு சதீஸ் ஆகியோர்  கலந்து கொண்டிருந்தனர்.

You might also like