வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் வெளிமாவட்டங்களுக்கான சேவை ஆரம்பம்

வவுனியா யாழ் வீதியில் 16.01.2017அண்மையில் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் திறந்துவைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்தில் செயற்பாடுகள் இன்று (18.01.2017) நடைபெறுகின்றது.
நேற்று (17.01.2017) மாலை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் வவுனியா பேரூந்து நிலையத்தில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்டதுடன் இன்றிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்வதற்கு அரச மற்றும் தனியார் பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்தில் சேவை மேற்கொள்வதற்கு முடிவு எடுக்கப்பட்டதுடன் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டு இன்று காலை முதல் தனியார் மற்றும் அரச பேரூந்துகள் இணைந்த நேர அட்டவணையில் ஒருவாரத்திற்கு சேவை மேற்கொள்வதற்கும் இணங்கி செயற்பட்டு வருகின்றனர்.
நேற்று அரசாங்க அதிபருடன் கலந்துரையாடலுக்குச் சென்ற வவுனியா வர்த்தகர் சங்க உறுப்பினர்களை கலந்துரையாட அனுமதிக்கவில்லை இதற்கு தனியார் பேரூந்து சங்க உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தாகவும் தெரியவருகின்றது.
பழைய பேரூந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் உள்ளுர்களுக்கான சேவைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.