மூன்று மில்லியன் ரூபா நிதியில் கிளிநொச்சி, வன்னேரிக்குளத்தின் புனரமைப்பு வேலைகள்

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் அணைக்கட்டிற்கான திருத்த வேலைகள் மாகாணத்திற்கென குறித்தொதுக்கப்பட்ட மூன்று மில்லியன் ரூபா நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சியில் காணப்படும் பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றாக கருதப்படும் வன்னேரிக் குளத்தின் கீழ் 346 ஏக்கர் நிலப்பரப்பில் 115 வரையான விவசாயக் குடும்பங்கள் விவசாய செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இக்குளத்தின் அணைக்கட்டு மற்றும் நீர்ப்பாசன வாய்க்கால்கள், கழிவு வாய்க்கால்கள் என்பன பல காலங்களாக சேதமடைந்து காணப்படுகின்றது.

இவ்வாறு சேதமடைந்த நிலையில் காணப்படும் குறித்த குளத்தின் புனரமைப்பு வேலைகள் தற்போது பல்வேறு நிதித்திட்டங்கள் மூலம் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like