சமுர்த்தி நலன் குறைக்கப்படாது – ஜனாதிபதி

சமுர்த்தி நலன் குறைக்கப்படும் என வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டி, கம்உதாவ மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

சமுர்த்தி நலன் திட்டத்தை குறைக்கவோ அதனை வரையறுக்கவோ அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அரசாங்கம் சமுர்த்தி நலனை குறைத்துள்ளதாக சில தரப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டே அரசாங்கம் கொள்கை வகுப்புக்களை மேற்கொள்கின்றது.சமுர்த்தி நலன் பெற்றுக்கொள்ளக் கூடிய பெற்றுக்கொள்ளாத பலர் நாட்டில் இருக்கின்றார்கள்.

சமுர்த்தி நலன்கள் வழங்குவதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர நலன்கள் குறைக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

You might also like