வவுனியா பண்டாரிக்குளத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி முன்னேடுப்பு

வவுனியா பண்டாரிக்குளத்தில் பிரஜைகள் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் இன்று (12.08.2017) காலை 8.30மணிக்கு தொடக்கம் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் பல மாவட்டங்களில் டெங்கினால் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. எனவே எங்கள் கிராமத்தையும் மக்களையும் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு சுற்றாடலில் நீர் தேங்கி நிற்காதவண்ணம் சுத்தம் செய்வதோடு வீட்டில் தேங்கி கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றி வேறுவேறான பிரித்து இன்றைய தினமும் நாளைய தினமும் பண்டாரிக்குளத்தில் மேற்கொள்ளப்படவுள்ள டெங்கு ஒழிப்பு சிரமான பணிக்கு ஒத்துளைப்பு வழங்குமாறு பொதுமக்களை ஏற்பாட்டுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

இவ் நடவடிக்கை சுகாதாரபரிசோதகர்களின் பங்கு பற்றலுடன், நகரசபை ஊழியர்கள், கிராம மக்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றது.

You might also like