பூநகரியில் வறட்சியின் தாக்கத்தினால் குடிநீர்ப் பிரச்சினை

வறட்சியின் தாக்கத்தினால் குடிநீர்ப் பிரச்சினை தோன்றியுள்ள நிலையில் பூநகரி செயலாளர் பிரிவு அதிகளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பூநகரிப்பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 15 இற்கும் அதிகமான கிராமங்கள் முற்றாக நீர் இன்றி காணப்படுகிறது. இவ்வாறான நீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பூநகரிப்பிரதேச சபை ஆகியவற்றுடன் இணைந்து வறட்சியினால் பாதிக்கபட்ட 5604 குடும்பத்தில் 2160 குடும்பத்தினருக்கு மாத்திரம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சுட்டிக்காட்டினார்.

மேலும், 3144 குடும்பங்களுக்கான குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளதாக அண்மையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைமை செயலக துணைத்தலைவர் உள்ளிட்ட குழுவினர் நிலைமை தொடர்பில் ஆராய்ந்தனர்

குறித்த சந்திப்பில் கிளிநொச்சி செஞ்சிலுவைச்சங்கத்தின் தலைவர் வேழமாலிகிதன், செயலாளர் சேதுபதி பிரிவுத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் குறித்த செஞ்சிலுவைச்சங்க தலைமைச்செயலக துனைத்தலைவர் உள்ளிட்ட குழுவினர் பூநகரிப்பிரதேசத்தின் கறுக்காய்த்தீவு மற்றும் ஞானிமடம் செட்டியகுறிச்சி போன்ற கிராம சேவையாளர் பிரிவுக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.

இதனை தொடர்ந்து செஞ்சிலுவைச்சங்க தலைமைச்செயலக துணைத்தலைவர் உள்ளிட்ட குழுவினர் பூநகரிப் பிரதேசத்தின் கறுக்காய்த்தீவு மற்றும் ஞானிமடம்

செட்டியகுறிச்சி போன்ற கிராம சேவையாளர் பிரிவுக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

You might also like