சற்று முன் வவுனியாவில் டெனிஸ்வரன் தொடர்பில் தீர்க்கமான முடிவேடுக்க ஒன்று கூடியது டெலோ

தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ முக்கிய தீர்மானங்களை எடுக்கும் நோக்கோடு இன்று (12.08.2017) காலை 10.30மணியளவில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா காரியாலயத்தில் ஒன்று கூடியுள்ளது.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் அக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

இக் கூட்டத்தில் வட மாகாண அமைச்சராக உள்ள டெலோ கட்சியை சேர்ந்த பா. டெனிஸ்வரன் தொடர்பில் தீர்க்கமான முடிவினை எடுக்கவுள்ளதாகவும் சம கால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக அக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இந் நிலையில் கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் வெளிநாட்டு அலுவலக பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like