வவுனியாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்தார் சிவாஜிலிங்கம்

வவுனியாவில் சுழற்சிமுறை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினரை இன்று (12.08.2017) காலை 9.30மணியளவில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சந்திந்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது காணாமல் போன உறவுகள் தொடர்பாகவும், அதற்கான போராட்டம் தொடர்பாகவும் அவர்களிடம் கேட்டறிந்தார்.

இதன் போது காணாமல் போன உறவுகள் தாம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினருக்கு எடுத்து கூறியுள்ளனர்.

காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினர் சுமார் 170 ஆவது நாளாக இங்கு சுழற்சிமுறை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

You might also like