பூநகரியில் நிலமெஹர ஜனாதிபதி மக்கள் சேவை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் அடிப்படையில் பூநகரி பிரதேச செயலக பிரிவில் நிலமெஹர ஜனாதிபதி மக்கள் சேவை இன்று இடம்பெற்றுள்ளது.

நிலமெஹர ஜனாதிபதி மக்கள் சேவையில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஒழுங்குப்படுத்தலில் இந்த நடமாடும் சேவை நடைப்பெற்று வருகிறது.

இந்த நடமாடும் சேவையில் காலங்கடந்த பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள், விவாக பதிவுகள், தேசிய அடையாள அட்டைப் பதிவுகள், சாரதி அனுமதிப் பத்திரம், முதியோர் அட்டை, காணி, சிறுதொழில் முயற்சி தொடர்பான அறிவுறுத்தல்கள், கடவுச்சீட்டு, வங்கிச்சேவைகள் போன்ற சேவைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, அமைச்சுகளின் திணைக்கள அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு சேவைகளை வழங்கியுள்ளனர்.

இதில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மற்றும் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபர் சத்தியசீலன், பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்

You might also like