கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான சொகுசு பஸ்ஸின் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான சொகுசு பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற  பதில் நீதவான் நீதிவான் எஸ். சிவபால சுப்பிரமணியம், நேற்று முன்தினம் (10.08.2017) உத்தரவிட்டார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஏ9 வீதியால் பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பஸ், கடந்த 4 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில், கிளிநொச்சியில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

குறித்த சம்பத்தின் போது மின்கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் என்பன சேதமாக்கப்பட்டதுடன், பஸ்ஸில் பயணித்த நான்கு பேர் காயமடைந்திருந்தனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கிளிநொச்சிப் பொலிஸார், பஸ்ஸின் சாரதியை கைதுசெய்திருந்ததுடன், அவர், நேற்று முன்தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

 

You might also like