வவுனியா பொலிஸாரின் ஏற்பாட்டில் பெண்களுக்கான இலவச சமையல் பயிற்சி

வவுனியா  சிந்தாமணி ஆலய மண்டபத்தில் இன்று (12.08.2017) காலை 10.30மணியளவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா காரியாலயம் ஏற்பாடு செய்த பொலிசார் பொதுமக்கள் நல்லுறவைக்கட்டி எழுப்பும் வேலைத்திட்டத்தில் பெண்களுக்கான இலவச சமையல் பயிற்சிகள் இடம்பெற்றது.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பிராந்திய பொலிஸ் அதிகாரி, வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஸோர், மற்றும் பொதுமக்கள் பெருமளவான பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்விற்கு பிரபல்யமான சமையல் கலை நிபுனர்கள் கலந்து கொண்டு சமையல் பயிற்சியினை வழங்கியிருந்ததுடன், அவர்களுக்கான நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

You might also like