கிளிநொச்சியில் இராணுவத்தினரால் 200 பேருக்கு மூக்கு கண்ணாடி வழங்கி வைப்பு

விசன் கெயாா் நிறுவனத்தின் அனுசரணையில்  கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் 200 பேருக்கு இன்று மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று (12.08.2017) சனிக்கிழமை கிளிநொச்சி இரணைமடு தாமரைத் தடாக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பார்வை குறைபாடுகள் உள்ள 200 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி படையினரின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன விசேட அதிதீயாக கலந்துகொண்டு  தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு மூக்குகண்ணாடிகளை வழங்கி வைத்துள்ளாா்.

You might also like