கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள இராணுவ நினைவுச் சின்னம் தேசிய நல்லிணக்கத்திற்கு பொருத்தமானது இல்லை

கிளிநொச்சி நகரில்  டிப்போச் சந்தியில் உள்ள  இராணுவ நினைவுச் சின்னம் தேசிய  நல்லிணக்கத்திற்கு பொருத்தமானது இல்லை என   ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புமாறு   மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்  கடந்த மே மாதம் தீர்மானமாக  நிறைவேற்றப்பட்டபோதும் இன்றுவரை குறித்த கடிதம் அனுப்பப்படவே இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் ஒரு நகரமாக வளர்ச்சியடையாது   இருப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும்  இராணுவம் ஆகிய இரு தரப்புமே தடையாக இருப்பதாக மே மாதம் 29ம் திகதி இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றம் சாட்டியிருந்தார்.

இதில்  நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி நகர திட்டமிடல் பற்றி விளக்கமளித்த போதே நாடாளுமன்ற  உறுப்பினர்  குறித்த  குற்றச் சாட்டை முன்வைத்தார் அத்துடன் .
கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைத்துள்ள இராணுவ  சின்னம் யாருக்காக இருக்கிறது? டிப்போச் சந்தியில் இருக்கின்ற செங்கல் சுவர்கள் எப்போது அமைக்கப்பட்டன? எங்கிருந்து செங்கற்கள் கொண்டுவரப்பட்டன? எனவும் 2009 இற்கு முன்  இடம்பெயர்ந்து சென்ற போது அந்த இடத்தில் அப்படி எதுவும் இருக்கவில்லை.

எனவே இதனை அமைக்க   நகர அவிருத்தி அதிகார சபையும்  உடந்தையாக இருக்கிறதா?” எனவும்  கேள்வி எழுப்பியதோடு  கிளிநொச்சி மாவட்டமும் ஓர் நகரமாவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை விடுகிறார்கள் இல்லை எனவும் நேரடியாகவே  குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டின் பெயரில் கிளிநொச்சி டிப்போச் சந்தியில் உள்ள  இராணுவ நினைவுச் சின்னம் நல்லிணக்கத்திற்கு பொருத்தமானது இல்லை என்பதால் அதனை அங்கிருந்து அகற்றுமாறு ஒருங்கிணைப்புக் குழுவின்  தீர்மானமாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதாக   தீர்மானமானிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 70 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் மாவட்டச் செயலகத்தினால் நேற்றுவரையில் குறித்த கடிதம் அனுப்பப்படவில்லை எனக் கண்டறியப்படுவது தொடர்பில் மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த கடிதம் தற்போதே தயார் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும் எனப் பதிலளித்தனர்.

You might also like